செவ்வாய், 23 நவம்பர், 2010

கணினியின் வாழ்நாள் அதிகரிக்க

கணினி சீராக இயங்க சீரான தட்பவெப்பநிலை வேண்டும். கணினியை அதிக நேரம் பயன்படுத்துவதனால் அதில் உள்ள ஹார்டு டிஸ்க், ப்ராசெச்செர் மற்றும் மதேர்போர்டு (hard disk, processor and mother board) ஆகியவை விரைவில் வெப்பமாகி விடும். இந்த வெப்பத்தை குறைக்க நம் கணினியில் பிராசெச்சொர், ம்தேர்போர்டு கூலிங் ஸ்பேன் (mother board/ processor cooling span) பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இதனால் நாம் முழு பலனை அடைவதில்லை. இதனால் நம் கணினியிலுள்ள வன்பொருட்கள் வாழ்நாள் குறைய வாய்ப்புண்டு. ஸ்பீடு ஸ்பேன் (speed span) என்கிற இநத சிறிய இலவச மென்பொருளை கொண்டு உங்களுடைய கணினி இருக்கும் அறையின் வெப்ப அளவை குறைக்க நீங்கள் வழி வகுக்கலாம். அதுமட்டுமின்றி இந்த மென்பொருளைக் கொண்டு உங்களுடைய கணினியின் வெப்பநிலையை அறிந்து கொள்ளலாம். இதனால் உங்களுடைய கணினி இருக்கும் அறையின் வெப்ப அளவை குறைக்க நீங்கள் வழி வகுக்கலாம். அது மட்டுமின்றி இநத மென்பொருள் நேரடியாக உங்களுடைய கணினியை கையாளும் திறன் உள்ளது. எனவே கணினியை கண்காணித்து தகவல்களை தெரிவிக்கிறது. பல மணி நேரம் கணினியை பயன்படுத்துபவர்களுக்கு தேவையான மென்பொருள் இது. தரவிறக்க இங்கே செல்லவும். நன்றி!